பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதமர் அனைத்து எல்பிஜி நுகர்வோர்களுக்கும் (33 கோடி இணைப்புகள்) எல்பிஜி சிலிண்டர் விலையை சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்து துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளார்


பிரதமர் உஜ்வாலா யோஜனா வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் தொடர்ந்து பெறுவார்கள்

75 லட்சம் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இது மொத்த பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.35 கோடியாக அதிகரிக்கும்

Posted On: 29 AUG 2023 5:10PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமையல் எரிவாயு விலையை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. 30.08.2023 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். உதாரணமாக, இம்முடிவால் தில்லியில், 14.2 கிலோ சிலிண்டரின் விலை தற்போதுள்ள ரூ.1103 லிருந்து மிகவும் மலிவு விலையான ரூ.903 ஆகக் குறையும். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு இது ஒரு பரிசு. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடையவும் அரசு எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறியுள்ளார்.

உஜ்வாலா திட்டத்தின் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு தற்போதுள்ள மானியமான 200 ரூபாய் வழங்கப்படுவதுடன், மேலும் ரூபாய் 200 குறையும். எனவே, பி.எம்.யு.ஒய் குடும்பங்களுக்கு, இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு தில்லியில் சிலிண்டரின் விலை ரூ.703 ஆக இருக்கும்.

நாட்டில் 9.6 கோடி உஜ்வாலா திட்டப் பயனாளிகள்ள்பட 31 கோடிக்கும் அதிகமான வீட்டு எல்பிஜி நுகர்வோர் உள்ளனர் என்பதையும், இந்த விலைக் குறைப்பு நாட்டில் உள்ள அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும்  உதவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள உஜ்வாலா திட்டத்தின் விண்ணப்பங்களைத் பரிசீலிப்பதற்கும், தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் இலவச எல்பிஜி இணைப்பை வழங்குவதற்கும், சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 75 லட்சம் பெண்களுக்கு உஜ்வாலா கேஸ் இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் தொடங்கும். இதன் மூலம் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 9.6 கோடியிலிருந்து 10.35 கோடியாக உயரும்.

குடிமக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதற்கும், குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவுகள் வந்துள்ளன. சமையல் எரிவாயு விலை குறைப்பு குடிமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  "குடும்பங்கள் தங்கள் வரவுசெலவுத் திட்டங்களை நிர்வகிப்பதில் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சமையல் எரிவாயு விலை குறைப்பு குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நேரடி நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசின் பெரிய இலக்கை ஆதரிக்கிறது.

சமையல் எரிவாயு விலைக் குறைப்பு சமூகத்தின் பரந்த அளவிலான மக்களின் வாழ்க்கைச் செலவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

-----------
 

AP/ANU/IR/RS/GK



(Release ID: 1953297) Visitor Counter : 244