பிரதமர் அலுவலகம்

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 23 AUG 2023 8:44PM by PIB Chennai

23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் தலைமையில் நடைபெற்ற 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

உலகளாவிய பொருளாதார மீட்சி, ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுடனான கூட்டாண்மை உள்ளிட்ட பயனுள்ள கலந்துரையாடல்களை தலைவர்கள் நடத்தினர், மேலும் பிரிக்ஸ் நிகழ்ச்சி நிரலில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

பிரதமர் தனது உரையின் போது, பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பி - தடைகளை உடைத்தல்

ஆர் - பொருளாதாரங்களுக்கு புத்துயிர்

ஐ - ஊக்கமளிக்கும் கண்டுபிடிப்பு

சி - வாய்ப்புகளை உருவாக்குதல்

எஸ் - எதிர்காலத்தை வடிவமைப்பது

பிரதமர் தனது பல்வேறு தலையீடுகளில் பின்வருவனவற்றை எடுத்துரைத்தார்:

யு.என்.எஸ்.சி  சீர்திருத்தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலக்கெடுவை அமைக்க அழைப்பு

பலதரப்பு நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு

உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு

பிரிக்ஸ் தனது விரிவாக்கம் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வலியுறுத்தல்

  ஒற்றுமையின் உலகளாவிய செய்தியை அனுப்புமாறு பிரிக்ஸ் வலியுறுத்தல்

பிரிக்ஸ் விண்வெளி ஆய்வு கூட்டமைப்பு உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

இந்திய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு - பிரிக்ஸ் கூட்டாளிகளுக்கு இந்திய கையிருப்பு

பிரிக்ஸ் நாடுகளிடையே திறன் மேப்பிங், திறன் மேம்பாடு மற்றும் இயக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது

சர்வதேச பெரிய பூனை (சிங்கம், புலி போன்ற விலங்குகள்)  கூட்டணியின் கீழ் பெரிய பூனைகளைப் பாதுகாக்க பிரிக்ஸ் நாடுகளின் முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சிகள்

பிரிக்ஸ் நாடுகளில் பாரம்பரிய மருத்துவ களஞ்சியம் அமைக்க முன்மொழிவு

ஜி 20 அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர உறுப்புரிமைக்கு ஆதரவளிக்குமாறு பிரிக்ஸ் கூட்டாளிகளுக்கு அழைப்பு

----

ANU/AD/PKV/KPG/DL



(Release ID: 1951830) Visitor Counter : 105