பிரதமர் அலுவலகம்

சமமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைவதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்த பிரதமரின் லிங்க்ட்இன் சமூகவலைதளப் பதிவு

Posted On: 18 AUG 2023 3:16PM by PIB Chennai

சமமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைவதில் இந்தியா எவ்வாறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது என்பது குறித்து பிரதமர் சமூக ஊடக தளமான லிங்க்ட்இன்-ல்  தமது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். இரண்டு ஆய்வு அறிக்கைகளின் முக்கியமான சுருக்கக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். ஒன்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு குழுவான எஸ்.பி.ஐ ரிசர்ச்-ன் அறிக்கை ஆகும். மற்றொன்று பிரபல பத்திரிகையாளரான திரு அனில் பத்மநாபன் ஆய்வு கருத்துக்களாகும்.

பிரதமரின் லிங்க்ட்இன் சமூகவலைதளப்பதிவின் தமிழாக்கம்:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான இரண்டு ஆய்வுத் தகவல்களை நான் கண்டேன்: ஒன்று எஸ்.பி.ஐ ஆய்வு ஆகும். மற்றொன்று பிரபல பத்திரிகையாளரான திரு அனில் பத்மநாபனின் ஆய்வுத் தகவலாகும்.

இந்த பகுப்பாய்வுகள் நம்மை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் சில தகவல்களை  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

சமமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

இந்த ஆய்வுத் தகவல்களிலிருந்து சில சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

வருமான வரி கணக்குகள் (ஐடிஆர்) தாக்கல் செய்யப்படுவதிலிருந்து தெரியவரும்  வருமானத்தின் அடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் சராசரி வருமானம் பெரிய அளவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது எஸ்பிஐ-யின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் ரூ. 4.4 லட்சமாக இருந்த இது 2023-ம்  நிதியாண்டில் ரூ. 13 லட்சமாக உயர்ந்துள்ளது.

திரு பத்மநாபனின் ஐடிஆர் தரவுகள் தொடர்பான ஆய்வில், வருமான வரம்புகளில் வரி அடித்தளம் விரிவடைந்து வருவது தெரியவந்துள்ளது.

மாநிலங்களில் வருமான வரி தாக்கல் அடிப்படையில், நேர்மறையான செயல்திறனை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 2014 மற்றும் 2023 க்கு இடையில் வருமானவரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல்களை ஒப்பிடும்போது,  அனைத்து மாநிலங்களிலும் வரி பங்களிப்பு அதிகரித்துள்ளது.

உதாரணமாக, உத்தரப்பிரதேசம், வருமான வரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல்களைப் பொறுத்தவரை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஜூன் 2014-ல், உத்தரப்பிரதேசத்தில் 1.65 லட்சம் ஐடிஆர் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ஜூன் 2023 -ல் இந்த எண்ணிக்கை 11.92 லட்சமாக உயர்ந்துள்ளது.

சிறிய மாநிலங்கள், அதுவும் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகியவை கடந்த 9 ஆண்டுகளில் வருமானவரி கணக்கு (ஐடிஆர்) தாக்கலில் 20 சதவீத்த்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. இது  ஊக்கமளிக்கும் தகவலாகும்.

வருமானம் மட்டுமல்லாமல், இணக்கச்சூழலும் அதிகரித்துள்ளது என்பதை ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது நமது அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

இந்த ஆய்வுத் தகவல்கள் நமது கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், நமது தேசத்தின் திறன்களை உறுதிசெய்கின்றன. வளர்ச்சியும், செழிப்பும் அதிகரிப்பது தேசத்தின் முன்னேற்றத்திற்கு நல்லது. சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் பொருளாதார வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தத்தின் விளிம்பில் உள்ளோம். 2047-ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (விக்ஷித் பாரத்) என்ற நமது கனவை  நிறைவேற்றும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

பிரதமர் திரு நரேந்திர மோடி லிங்க்ட்இன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முழுமையான ஆங்கிலப் பதிவை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://www.linkedin.com/pulse/indias-rising-prosperity-narendra-modi

***

SM/PLM/AG/KPG


 



(Release ID: 1950178) Visitor Counter : 108