பிரதமர் அலுவலகம்
'வீடு தோறும் மூவண்ணக்கொடி' திட்டத்தின் கீழ் தேசியக் கொடியுடன் புகைப்படங்களை பதிவேற்றுமாறு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
Posted On:
11 AUG 2023 8:41PM by PIB Chennai
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை 'வீடு தோறும் மூவண்ணக்கொடி' இயக்கத்தின் கீழ் harghartiranga.com தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
'வீடு தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவுக்கு ஒரு புதிய ஆற்றலை ஊட்டியுள்ளது. நாட்டு மக்கள் இந்த ஆண்டு இந்தப் பிரச்சாரத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் பெருமையின் சின்னமான தேசியக் கொடியை ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஏற்றுவோம். மேலும் உங்கள் செல்ஃபியை மூவர்ண கொடியுடன் harghartiranga.com பதிவேற்றவும். "
"மூவண்ணக்கொடி சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் மூவர்ணக் கொடியுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பைக் கொண்டுள்ளனர், மேலும் இது தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்த கடினமாக உழைக்க நம்மை ஊக்குவிக்கிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் #HarGharTiranga இயக்கத்தில் பங்கேற்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மூவண்ணக் கொடியுடன் உங்கள் புகைப்படங்களை இங்கே பதிவேற்றவும்... harghartiranga.com."
**************
ANU/AD/PKV/KRS
(Release ID: 1947998)
Read this release in:
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam