குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியனம ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்தனர்

Posted On: 19 JUL 2023 1:02PM by PIB Chennai

சாட், புருண்டி, ஃபின்லாந்து, அங்கோலா மற்றும் எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் புதிய நியமனங்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (19.07.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். தங்களது நியமன ஆணைகளை அளித்த தூதர்கள்:

  1. திருமதி தில்லா லூசின், சாட் குடியரசுத் தூதர்
  2. பிரிகேடியர் ஜெனரல் அலாய்ஸ் பிசின்தாவி, புருண்டி குடியரசுத் தூதர்
  3. திரு கிம்மோ லாதேவிர்த்தா, ஃபின்லாந்து குடியரசுத் தூதர்
  4. திரு கிளமன்டே பெட்ரோ பிரான்சிஸ்கோ கேமன்ஹா, அங்கோலா குடியரசுத் தூதர்
  5. திரு திமேக் அட்னாஃபு அம்புலோ  எத்தியோப்பியா குடியரசு ஜனநாயக கூட்டமைப்புத் தூதர்

***

(Release ID: 1940648)

LK/IR/KPG/RR


(Release ID: 1940663) Visitor Counter : 162