பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிரான்ஸ் பயணம்: மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், ஒப்பந்தங்கள் மற்றும் பயன்கள் தொடர்பான பட்டியல்

Posted On: 14 JUL 2023 10:00PM by PIB Chennai

நிறுவன ஒத்துழைப்பில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் முடிவுகள்:

1.    புதிய தேசிய அருங்காட்சியகம் மற்றும் அருங்காட்சியகவியல் ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதம்

2. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஃபிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஃபிரான்ஸ் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. இந்தியாவுக்கும் ஃபிரான்சுக்கும் இடையில் சிவில் விமானப் பாதுகாப்புக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

5. பிரசார் பாரதிக்கும் ஃபிரான்ஸ் அரசு ஊடகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான விருப்பக் கடிதம்

6. இன்வெஸ்ட் இந்தியா மற்றும் பிசினஸ் ஃபிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு:

1.    இந்தியா-ஃபிரான்ஸ் கூட்டு புவி கண்காணிப்பு திட்டமான திரிஷ்னா-வை செயல்படுத்த ஏற்பாட்டுத் திட்டம்

2.    கடல்சார் கள விழிப்புணர்வு குறுகிய காலத்திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு

3.    விண்வெளி மென்பொருள்கள் தொடர்பான மதிப்பீட்டு சேவைக்கான ஒப்பந்தம்

 

4.    லாஞ்சர் துறையில் கூட்டு செயல்பாடு குறித்து இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் இடையே கூட்டுப் பிரகடனம்

அறிவியல் ஒத்துழைப்பு:

1.    சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே விருப்பக் கடிதம்

2. சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஃபிரான்ஸில் உள்ள இன்ஸ்டியூட் ஃபிரான்சைஸ் டி ரெச்செர்ச் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

உத்திசார் துறைகளில் ஒத்துழைப்பு:

1. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் மெஸர்ஸ் டோட்டல் எனர்ஜிஸ் கேஸ் அண்ட் பவர் லிமிடெட் (டோட்டல் எனர்ஜிஸ்) இடையே நீண்ட கால எல்என்ஜி விற்பனை மற்றும் கொள்முதல் பணிகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம்

அறிவிப்புகள்

அரசியல் மற்றும் உத்தி சார் துறைகளில் ஒத்துழைப்பு:

1.    இந்தியா - ஃபிரான்ஸ் கூட்டு செயல்பாடு-  2047 தொடர்பான செயல்திட்டம் கூட்டுப் பத்திரிகை செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது

2. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா-ஃபிரான்ஸ் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் கூட்டுப் பத்திரிகை செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது

3. என்எஸ்ஐஎல் மற்றும் ஏரியன்ஸ்பேஸ் ஆகியவை வணிக ரீதியான விண்வெளி சேவைகளில் ஒத்துழைக்க விருப்பக் கடிதம்

நீடித்த வளர்ச்சியில் ஒத்துழைப்பு:

1.    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதற்கான கூட்டு உறுதிப்பாட்டு திட்டம் பத்திரிகை செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது

மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் நலத் திட்டங்களில் ஒத்துழைப்பு:

1. மார்சேயில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும் என அறிவிப்பு

 

2. விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு செயல்பாடுப் பிரகடனம்

3. செஃபிப்ரா (CEFIPRA) எனப்படும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்தோ-ஃபிரான்ஸ் மையத்திற்கான நிதி அதிகரிப்பு மற்றும் உதவித்தொகைகள் அதிகரிப்பு குறித்த அறிவிப்பு  வரைவு செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

4. ஃபிரான்ஸ் கல்வி நிறுவனங்களில் (முதுகலை மற்றும் அதற்கு மேற்பட்ட) பட்டம் பெற்ற இந்தியர்களுக்கு ஐந்தாண்டு செல்லுபடியாகும் குறுகிய கால ஷெங்கன் விசா வழங்குதல் தொடர்பான அம்சம் அறிவிப்பு  வரைவு செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

5. அலுவல் ரீதியான பாஸ்போர்ட்டுகளுக்கு விசா விலக்கு என்ற அம்சம் வரைவு செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

6. புரோபார்கோ (ஃபிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் துணை நிறுவனம்) மற்றும் சத்யா மைக்ரோ ஃபைனான்ஸ் இடையே 20 மில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் வரைவு செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

11. நிலையான நகரங்கள் குறித்த இந்திய திட்டத்தின் 2-வது கட்டத்திற்கு ஃபிரான்ஸ் ஆதரவு அளிக்கும் திட்டம் வரைவு செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

***

(Release ID: 1939814)



(Release ID: 1940080) Visitor Counter : 96