பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற ஃபிரான்ஸ் யோகா ஆசிரியர் திருமதி சார்லட் சோபின் உடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUL 2023 9:57PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 14 ஜூலை 2023 அன்று பாரிஸில் புகழ்பெற்ற ஃபிரான்ஸ் யோகா ஆசிரியர் திருமதி சார்லட் சோபினை சந்தித்தார்.

 

திருமதி சோபினுக்கு யோகா மீது உள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும், பிரான்சில் யோகாவை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பணிகளையும் பிரதமர் பாராட்டினார்.

 

யோகா எவ்வாறு மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் முழுமையான நல்வாழ்வை ஊக்குவிக்கிறது என்பது குறித்த தனது கருத்துக்களை திருமதி சோபின் பகிர்ந்து கொண்டார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மீதான ஆர்வம் அதிகரித்தது குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

***

AP/ASD/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1939703) வருகையாளர் எண்ணிக்கை : 173