நிதி அமைச்சகம்
பேரிடர் மீட்புக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,532 கோடியை விடுவித்துள்ளது
प्रविष्टि तिथि:
12 JUL 2023 4:03PM by PIB Chennai
மாநில பேரிடர் மீட்பு நிதிகளுக்காக 22 மாநில அரசுகளுக்கு ரூ.7,532 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை இன்று விடுவித்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 450 கோடி, ஆந்திரப் பிரதேசத்திற்கு 493.60 கோடி, கர்நாடகாவுக்கு 348.80 கோடி, கேரளாவிற்கு 138.80 கோடி, தெலங்கானாவிற்கு 188.80 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு 180.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றிதழுக்கு காத்திருக்காமல், மாநிலங்களுக்கு உடனடியாக நிதியை விடுவிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938934
***
LK/IR/RS/AG
(रिलीज़ आईडी: 1938966)
आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada