பிரதமர் அலுவலகம்

கனடா ஓபன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற லக்ஷ்யா சென்னுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 10 JUL 2023 8:38PM by PIB Chennai

கனடா ஓபன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென்னுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"கனடா ஓபன் 2023-ல் சிறப்பான வெற்றியைப் பெற்ற திறமையான @lakshya_sen-க்கு வாழ்த்துக்கள்!

அவரது வெற்றி அவருடைய விடாமுயற்சிக்கும் உறுதிக்கும் சான்றாகும். இது நம் தேசத்தையும் மிகுந்த பெருமை அடையச் செய்துள்ளது.  அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

***

AD/ANT/GK



(Release ID: 1938629) Visitor Counter : 108