பிரதமர் அலுவலகம்
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான திரு எலான் மஸ்க்-வுடனான பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
21 JUN 2023 8:22AM by PIB Chennai
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் எக்ஸ்-கார்ப் மற்றும் போரிங் நிறுவனரும், நியூராலிங்க் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனங்களின் இணை நிறுவனருமான திரு எலன் மஸ்க்-ஐ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அப்போது, பல்வேறு துறைகளில், தொழில்நுட்பங்களை எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்ற திரு எலான் மஸ்க் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் விரிவடைந்து வரும் விண்வெளித்துறை, மின்சார வாகனத்துறை ஆகியவற்றில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு திரு எலான் மஸ்க்-கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
***
(Release ID: 1933798)
SM/ES/RJ/KRS
(रिलीज़ आईडी: 1934198)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam