பிரதமர் அலுவலகம்
எதிர்வரும் தமது அமெரிக்க பயணம் குறித்து மக்களிடையே எழுந்துள்ள உற்சாகத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUN 2023 10:05PM by PIB Chennai
எதிர்வரும் பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து எழுந்துள்ள பலதரப்பட்ட ஆதரவு மற்றும் உற்சாகத்திற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை தலைவர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களும் எதிர்வரும் எனது அமெரிக்க பயணம் தொடர்பான தங்களது உற்சாகத்தை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களது அன்பான வார்த்தைகளுக்கு எனது நன்றி. இது போன்ற பலதரப்பட்ட ஆதரவு, இந்திய-அமெரிக்க உறவுகளின் வலிமையை எடுத்துரைக்கிறது.”
***
(Release ID: 1933528)
PKV/BR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1933594)
வருகையாளர் எண்ணிக்கை : 178
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada