தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிபர்ஜாய்” புயல் பற்றிய களச்செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக் குறித்து கவலை தெரிவித்துள்ள தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 15 JUN 2023 12:02PM by PIB Chennai

புதுதில்லி, ஜூன் 15, 2023

“பிபர்ஜாய்” புயல் பற்றிய களச்செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு  ஊடகஅமைப்புகளின் குறிப்பாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும்  இதர ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புயல் குறித்த செய்தி சேகரிப்புக்கு பணியமர்த்தும் அனைத்து ஊடகங்களுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்படக்கூடும் என்ற  பகுதிகளுக்கு தங்களின் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தும் போது உரிய கவனம் செலுத்துமாறும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஊடக நிறுவனங்களை இந்த அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் ஊடக நிறுவனங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் முன்னெச்சரிக்கை தகவல்களை பின்பற்ற வேண்டும் என்றும் இந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

“பிபர்ஜாய்” புயல் இன்று எந்த நேரத்திலும் நாட்டின் மேற்குக் கடலோரப்பகுதியை தாக்கக் கூடும் என்றும் கடுமையான சேதங்களை விளைவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் காரணமாக ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் அனைத்து முயற்சிகளையும்  மேற்கொள்ளும் என்று இந்த அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

----

 


(रिलीज़ आईडी: 1932565) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Odia