பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தில் ஆவணக் காப்பு முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUN 2023 7:06PM by PIB Chennai

முறையான ஆவணக் காப்பின் அவசியத்தையும் நமது பாரம்பரியம் மற்றும் அறிவைப் பாதுகாப்பதில் அதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

சர்வதேச ஆவணக் காப்பகத் தினத்தையொட்டி  இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிக் குறித்த  ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“முறைப்படியான ஆவணக் காப்பு என்பது நமது பாரம்பரியம் மற்றும் அறிவைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு சான்றாகும். கடந்த காலத்துடன் எதிர்காலத் தலைமுறைகளை இணைப்பதை இது உறுதி செய்வதோடு நமது கூட்டான ஞானத்தை தொடர்ந்து கட்டமைக்கும். நமது வரலாற்றை விடாமுயற்சியுடன் பாதுகாக்கும் நமது ஆவணக் காப்பாளர்களை நாம் பாராட்டுவோம்.”

---- 

 

AP/SMB/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1931133) வருகையாளர் எண்ணிக்கை : 216