தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

"ஒவ்வொரு பைசாவும் ஏழைகளின் நன்மைக்கே" என்ற கொள்கையுடன் அரசு செயல்படுகிறது: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 27 MAY 2023 4:33PM by PIB Chennai

9 ஆண்டுகள் சேவை நல்லாட்சி ஏழைகளின் நல்வாழ்வு - தேசிய மாநாட்டை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்தார்

 

9 ஆண்டுகளில் இந்தியா பலவீனமான ஐந்தில் இருந்து முதல் ஐந்து என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளது: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

 

பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை உலகின் வலிமையான கொடியாக மாற்றியுள்ளார்: திரு தாக்கூர்

 

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று '9 ஆண்டுகள் சேவை நல்லாட்சி ஏழைகளின் நல்வாழ்வு' தேசிய மாநாட்டை புது தில்லியில் விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்புத்துறையின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா மற்றும் பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் திவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், ஏழையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாக சொந்த வீடு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். அந்த வகையில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இன்று நாட்டில் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளின் வாழ்வில் தரமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்றார்.

 

ஒவ்வொரு வீட்டையும் குழாய் நீர் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே ஒரு பிரம்மாண்டமாகவே பார்க்கப்பட்டது. அது ஒருபோதும் சாத்தியமற்றது என்றே கருதப்பட்டது. ஆனால், பிரதமர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டதால் இன்று 12 கோடி மக்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். அதே சமயம், பல காலமாக இருந்து வந்த கொடுமைகளுக்கு மாற்றாக அரசு பாடுபட்டு 9.6 கோடி எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளது என்றார்.

 

கடந்த காலங்களில் அரசின் திட்டங்களின் பலன்கள் ஒரு சிலரை மட்டுமே சென்றடையும் நிலையில், இன்று வரிசையில் நிற்கும் கடைசி நபரின் முன்னேற்றத்திற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. 27% மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் முயற்சிகளின் ரகசியம் இது என்றார். சேவை உணர்வு, சிறந்த யோசனைகள், நல்ல நிர்வாகம், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், விநியோக பொறிமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உருவாக்குதல் ஆகியவை பொது சேவைகளின் கடைசி மைல் விநியோகத்தை உறுதி செய்வதில் ஈடுபட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

 

அரசின் 9 ஆண்டுகளுக்கான தேசிய மாநாடு, தொடக்க அமர்வுக்குப் பிறகு மூன்று கருப்பொருள் அமர்வுகள் மற்றும் ஒரு பாராட்டு அமர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

***

AP/CJL/DL



(Release ID: 1927760) Visitor Counter : 154