தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அரசின் கடந்த ஒன்பது ஆண்டு கால கொள்கைகள் இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் இந்தியாவை எவ்வாறு மேம்படுத்தியுள்ளன என்பதை தேசிய மாநாடு விவாதிக்கிறது
Posted On:
27 MAY 2023 5:46PM by PIB Chennai
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் குடிமக்கள், புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஒன்று கூடி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இளைஞர்களின் அதிகாரமளிப்புக்கு எவ்வாறு பங்களித்தன என்பதைப் பற்றி ஆலோசிக்க, "யுவ சக்தி: இந்தியாவை ஊக்கப்படுத்துதல்" என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. பிரசார் பாரதியால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய மாநாடு: 9 ஆண்டுகள் சேவை நல்லாட்சி ஏழைகளின் நல்வாழ்வு" மாநாட்டில் இந்த அமர்வு நடைபெற்றது.
தொழில்முனைவோருக்கான ஆதரவை நிறுவன மயமாக்கியதற்காக அரசாங்கம் பெருமைப்பட வேண்டும்”
ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன என்று எஸ்பிரெசோ டெக்னாலஜிஸ் இயக்குநர் யசோதரா பஜோரியா தெரிவித்தார். வேளாண் இணைய சந்தை பற்றிக் குறிப்பிட்டு, தற்போது தனது விளைபொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய ஒரு பெண் விவசாயியின் உதாரணத்தை அவர் கூறினார். "உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் விவசாயிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு களநிலை ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அரசின் கொள்கைகள் பல்வேறு கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு வழிவகுத்தன, அவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளன"
ரித்தேஷ் அகர்வால், தலைமை நிர்வாக அதிகாரி ஒயோ ரூம்ஸ் கூறுகையில், இன்று நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள பல்வேறு சேவைகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. "ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இளைஞர்களால் உந்தப்பட்ட இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.
"அடிமட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதில் அரசாங்கம் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளது"
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு இது ஒரு சிறந்த தருணம் என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வீரேன் ரஸ்குவின்ஹா தெரிவித்துள்ளார். 2016 மற்றும் 2021 க்கு இடையில் நடந்தது என்னவென்றால், விளையாட்டு உள்கட்டமைப்பு நிறைய மேம்பட்டுள்ளது. அடித்தட்டு அளவில் முதலீடு செய்வதில் அரசு சிறப்பான பணிகளை செய்துள்ளது என்றார்.
"கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா போன்ற திட்டங்களுடன் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" குத்துச்சண்டை வீரர் அகில் குமார் கூறுகையில், பெரிய போட்டிகளுக்கு முன்பு பிரதமர் விளையாட்டு வீரர்களை சந்தித்து உரையாடும் போது, அது வீரர்களுக்கு நிறைய உந்துதலை அளிக்கிறது. விளையாட்டை ஊக்குவிக்க, விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவது இன்றியமையாதது என்றார். கேலோ இந்தியா போன்ற அதிகாரமளிக்கும் திட்டங்களால், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
"சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள திறமைகளை ஊக்குவிப்பதில் அரசு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது" இந்தியாவிற்கு இது ஒரு உச்ச நேரம் என்றும் அனைத்து வகையான கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு கணிசமாக வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
"இந்தியாவின் தனித்துவமான கதைகளை உலகிற்கு வழங்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று நடிகர் ரிஷப் ஷெட்டி கூறினார்.
***
AP/CJL/DL
(Release ID: 1927756)
Visitor Counter : 192
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam