பிரதமர் அலுவலகம்
பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பை-யை சென்றடைந்தார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2023 8:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 21 மே 2023 அன்று மாலை, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பை-யை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் திரு ஜேம்ஸ் மராப்பே பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். 19 குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட ராணுவ வீர்ர்களின் மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.
ஒரு இந்தியப் பிரதமர் பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது.
******
(Release ID: 1926143)
AD/ES/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1926274)
வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam