மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 17 MAY 2023 4:05PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உயர்தர தொழில்நுட்பம் குறைந்த செலவில் கிடைப்பதை ஊக்குவுக்கிறது.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உலக சுகாதாரம் 10.10.2022 அன்றும், 18.10.2022 அன்று சுகாதார ஆராய்ச்சித் துறையும் கையொப்பமிட்டன.

இந்த ஒத்துழைப்பு,தொழில்நுட்பத்தை அணுகுவதில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது மற்றும் பொருத்தமான பயிற்சி திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924771

******

AP/CR/KRS


(रिलीज़ आईडी: 1924836) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam