தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சிறந்த நிர்வாகத்திற்கான கருவியாக மக்களைச் சார்ந்த தகவல் தொடர்பு குறித்த ஒருநாள் சிந்தனை அமர்வை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார்
Posted On:
17 MAY 2023 2:47PM by PIB Chennai
சிறந்த நிர்வாகத்திற்கான கருவியாக மக்களைச் சார்ந்த தகவல் தொடர்பு குறித்த ஒருநாள் சிந்தனை அமர்வை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ஊடகப்பிரிவு உட்பட, தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், இந்திய தகவல் பணி அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் புதிய முறைகளை கண்டறிந்து, அதில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு கூறிய திரு தாக்கூர், ஊடக நிலப்பரப்பு விரைவாக மாறி வருவதாகவும், மக்கள் தகவல்களைப் பயன்படுத்தும் முறையும் மாறுவதாகவும் கூறினார். அந்த நோக்கத்தில், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நமது தகவல் அளிக்கும் முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் என்று திரு அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924741
******
AP/IR/AG/KRS
(Release ID: 1924784)
Visitor Counter : 178
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam