பிரதமர் அலுவலகம்

அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு மே 16 அன்று வேலைவாய்ப்பு முகாம் மூலம் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்

Posted On: 15 MAY 2023 11:41AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சுமார் 71,000 பேருக்கு மே 16 அன்று, காலை மணி 10:30 அளவில் காணொலிக்காட்சி வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியம ஆணைகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடனும் பிரதமர் உரையாட உள்ளார்.

நாடு  முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்தப் பணியாளர் சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், வணிக எழுத்தர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவி பதிவாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு பெருக்கி உயர்முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கில் இந்த  வேலைவாய்ப்பு முகாம் திகழ்கிறது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பதற்கும் அவர்கள், அதிகாரம் பெறுவதற்குமான முறையான வாய்ப்பை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பை பெருக்குவதோடு அதற்கான உந்துசக்தியாக இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக பணி நியமன ஆணை பெறுபவர்கள் கர்மயோகி பரம்ப் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணி மேற்கொள்வதற்கான அடிப்படை பயிற்சிகள் ஆன்லைன் மூலம் அளிக்கப்படும்.

 

******

 

AD/IR/RJ/KPG



(Release ID: 1924157) Visitor Counter : 211