பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சிப் பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 12 MAY 2023 2:42PM by PIB Chennai

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சிப் பெற்றுள்ள அனைத்து #தேர்வு வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான ட்விட்டர் செய்திகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சிப் பெற்றுள்ள அனைத்து #தேர்வு வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த இளைஞர்களின் கடின உழைப்பையும், மனஉறுதியையும் எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த இளைஞர்களின் வெற்றியில் மிகச் சிறந்த பங்களிப்பை செய்துள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் நான் வாழ்த்துகிறேன்.”

“12 ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பாக செய்திருப்பதாக நினைக்கின்ற பிரகாசமான இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், வரும் காலங்களில் இன்னும் கூடுதலான முன்னேற்றத்தை நீங்கள் காண வேண்டியுள்ளது. ஒரு தொகுப்பு தேர்வுகள் மட்டும் உங்களை தீர்மானித்து விட முடியாது. நீங்கள் விரும்பும் துறைகளில் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒளிர்வீர்கள்!”

***

AD/SMB/RR/KPG


(रिलीज़ आईडी: 1923684) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam