பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சி பற்றிய ஜப்பான் தூதரக செய்திக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்

Posted On: 03 MAY 2023 7:57PM by PIB Chennai

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் குறித்து இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் ட்விட்டர் வாயிலாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்த தூதரகம், “மனதின் குரல்: வானொலியில் ஓர் சமூகப் புரட்சி” என்ற புத்தகத்திற்கு மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபே முன்னுரை எழுதியிருந்ததையும் நினைவு கூர்ந்தது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 89-வது அத்தியாயம் குறித்தும் தூதரக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த  அத்தியாயத்தில், ஆசிய நாடுகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத நாடகங்களை இயற்றி வரும் ஜப்பான் நாட்டு கலைஞர்கள் பற்றி பேசும்போது இந்திய- ஜப்பான் கலாச்சார உறவுகளை பிரதமர் பாராட்டியிருந்தார்.

தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், “கனிவான வார்த்தைகளுக்கும், எனதருமை நண்பர் மறைந்த திரு ஷின்சோ அபேவை நினைவு கூர்ந்ததற்கும் மிக்க நன்றி”, என்று தெரிவித்தார்.

***

 (Release ID: 1921779)

AD/BR/RR


(Release ID: 1921857) Visitor Counter : 170