பிரதமர் அலுவலகம்
திரு. பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 APR 2023 9:40PM by PIB Chennai
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு. பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது தொடர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“திரு. பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரிதும் பங்களித்த குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார் மற்றும் நெருக்கடியான காலங்களில் நங்கூரத்தை போல் மாநிலத்திற்கு சிறந்த பலமாக இருந்தார்.
திரு. பிரகாஷ் சிங் பாதலின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. நான் பல ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். மேலும், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.. எங்களின் பல உரையாடல்களை நான் நினைவுகூர்கிறேன், அதில் அவருடைய ஞானம் எப்போதும் தெளிவாகத் தெரிந்தது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் எனது இரங்கல்கள்.”
(रिलीज़ आईडी: 1919748)
आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam