பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கைச் சேர்ந்த திறமைமிக்கக் கைவினைஞர்களின் வாழ்க்கை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பிடிபி-என்இஆர் என்பது மகத்தான திட்டமாகும்

प्रविष्टि तिथि: 19 APR 2023 3:13PM by PIB Chennai

வடகிழக்கைச் சேர்ந்த திறமைமிக்கக் கைவினைஞர்களின் வாழ்க்கை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட வடகிழக்கு பழங்குடி மக்கள்  உற்பத்தி பொருட்களின்  விற்பனையை அதிகரிப்பதற்கான சந்தைப்படுத்துதல் மற்றும் சரக்குப்போக்குவரத்து  (பிடிபி-என்இஆர்) திட்டம் மகத்தானதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வடகிழக்கைச் சேர்ந்த பொருட்களுக்கு  சிறந்த பார்வையையும் இந்தத் திட்டம் உறுதிசெய்யும் என்று திரு மோடி கூறினார்.

பிடிபி-என்இஆர் திட்டத்தின் நோக்கம் பொருள்களின் கொள்முதல், சரக்குப் போக்குவரத்து, சந்தைப்படுத்துதலில் திறமையை விரிவாக்குவதன் மூலம் பழங்குடியின கைவினைக் கலைஞர்களுக்கான  வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்துவது என்று மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“வடகிழக்கைச் சேர்ந்த திறமைமிக்கக் கைவினைஞர்களின் வாழ்க்கை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பிடிபி-என்இஆர் என்பது மகத்தான திட்டமாகும். வடகிழக்கைச் சேர்ந்த பொருட்களுக்கு  சிறந்த பார்வையையும் இது உறுதிசெய்யும். இதன் மூலம் பழங்குடியின சமூகங்கள் குறிப்பாகப் பயனடையும்.”

***

(Release ID: 1917866)

AP/SMB/AG/KRS


(रिलीज़ आईडी: 1917932) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam