பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிப்பது குறித்த ஒரிசா மாநில நாடாளுமன்ற உறுப்பினரின் ட்விட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 10 APR 2023 10:06AM by PIB Chennai

விழிப்புணர்வு மற்றும் வெகுமக்கள் பங்கேற்பின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிப்பது குறித்த ஒடிசா மாநிலம் பாலங்கீர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சங்கீதா குமாரி சிங் தேவ்  வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஊட்டச்சத்து இயக்கத்தை செயல்படுத்த அரசு   மேற்கொண்டுள்ள முன் முயற்சிகளின் தாக்கம் குறித்து ஒடிசா மாநிலம் பாலங்கீர் நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதை ஊட்டச்சத்து இயக்கம் உறுதி செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மை இந்தியா பற்றி மக்களுக்கு பிரதமர் விடுத்திருந்த தெளிவான அழைப்பைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரது  அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டதால், வலுவான இயக்கமாக அது மாறியுள்ளது. இதேபோல அரசின் திறமையான செயல்பாடு, மற்றும் மக்களின் தீவிர பங்கேற்பால் ஊட்டச்சத்து இயக்கமும், வெற்றியடைந்து வருகிறது.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு வருமாறு;

"விழிப்புணர்வு மற்றும் வெகுமக்களின் பங்கேற்பின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அச்சுறுத்தலைக் கையாள்வது குறித்த ஒரு சுவாரஸ்யமான பதிவு."

***

AD/PKV/AG/RR

 


(Release ID: 1915283)