பிரதமர் அலுவலகம்
பிரதமரின் முத்ரா கடனுதவித் திட்டம் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரதமர் பாராட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
08 APR 2023 11:59AM by PIB Chennai
பிரதமரின் முத்ரா கடனுதவித் திட்டம் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மை கோவ் இந்தியாவின் (MyGovIndia) தொடர் ட்வீட்களுக்குப் பதிலளித்துள்ள பிரதமர்,
பிரதமரின் முத்ரா கடனுதவித் திட்டம் நிதியில்லாதவர்களுக்கு நிதியுதவி செய்வதிலும் எண்ணற்ற இந்தியர்களுக்கு கண்ணியம் மற்றும் செழிப்புடன் வாழ்வதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இன்று, முத்ரா கடனுதவித் திட்டத்தின் எட்டு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அதன் மூலம் பயனடைந்த அனைவரின் தொழில் முனைவோர் ஆர்வத்திற்கும் செல்வத்தை உருவாக்குபவர்களாகத் திகழ்வதற்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
"முத்ரா கடனுதவித் திட்டத்தின் வேகம் மற்றும் அளவைப் பற்றி இந்த வீடியோ நல்ல யோசனையைத் தருகிறது." என்று வீடியோவுடன் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்தான நிதியமைச்சகத்தின் ட்வீட்டிற்குப் பதிலளித்துள்ள பிரதமர், "நமது மக்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
***
CJL/SM/DL/RS
(रिलीज़ आईडी: 1914867)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada