பிரதமர் அலுவலகம்
சில்சார் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ‘வாழ்க்கையை எளிதாக்கும்’ வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
03 APR 2023 9:55AM by PIB Chennai
சில்சார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ‘வாழ்க்கையை எளிதாக்கும்’ வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜ்தீப் ராய், சில்சாரின் வளர்ச்சிப் பயணம் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கல்வி, துப்புரவு, சுகாதாரம், நீர் வழங்கல், சுற்றுச்சூழல், போக்குவரத்து, மலிவு விலையில் வீடுகள், பாதுகாப்பான பொது சேவைகள் என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்தின் பொருளாதாரத் திறனுடன் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். மத்திய அரசின் சுகாதார சேவைகள், ஆரோக்கிய மையம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் ஆகியவை சில்சார் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் பிற வளர்ச்சி முயற்சிகள் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"வளர்ச்சித் திட்டத்தின் பலன்கள் சில்சார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்கி' மேம்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி."
***
(Release ID: 1913180)
SRI/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1913208)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam