பிரதமர் அலுவலகம்
புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கிரிஷ் பப்பட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAR 2023 4:19PM by PIB Chennai
புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கிரிஷ் பப்பட் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“திரு கிரிஷ் பப்பட், பணிவான மற்றும் கடினமாக உழைக்கும் தலைவராக திகழ்ந்து சமூகத்திற்கு தொடர்ந்து சேவைகளை செய்தார். மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்காக அவர், பெரிய அளவில் பணியாற்றினார். குறிப்பாக, புனேவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் அவர் செயல்பட்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.”
“திரு கிரிஷ் பப்பட், மகாராஷ்டிராவில் பிஜேபியை கட்டமைக்கவும், வலுப்படுத்தவும் முக்கிய பங்காற்றினார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பியதுடன், எளிதில் அணுகக்கூடிய சட்டப்பபேரவை உறுப்பினராக திகழ்ந்தார். திறன் வாய்ந்த அமைச்சராகவும் அவர் செயலாற்றி இருப்பதுடன், பின்னர் புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். அவரது சிறப்பான பணிகள் மக்களை ஊக்குவிக்கும்.”
***
AD/PLM/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1911869)
வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam