பிரதமர் அலுவலகம்

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரா வரையிலான வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

மெட்ரோவில் பயணம் செய்தார்

Posted On: 25 MAR 2023 2:10PM by PIB Chennai

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரா வரையிலான மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு மெட்ரோவில் பயணித்து, பல்வேறு தரப்பு மக்களுடன் உரையாடினார்."

ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர், முதலில் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட்டை வாங்கி, அதன்பின்னர் கண்காட்சியைப் பார்வையிட்டார். அதன்பின்னர் ஒயிட் ஃபீல்ட் மெட்ரோ வழித்தட திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் பெயர் பலகையைத் திறந்து வைத்த பிரதமர், மெட்ரோவில் தமது பயணத்தின் போது, பெங்களூரு மெட்ரோவின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடினார்.

பிரதமருடன் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை ஆகியோர் உடன் இருந்தனர்.

 

பின்னணி

நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி, பெங்களூரு மெட்ரோ 2-ம் கட்டத்தின் கீழ் ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ முதல் கிருஷ்ணராஜபுரா மெட்ரோ லைன் ஆஃப் ரீச்-1 வரையிலான 13.71 கி.மீ தூரத்தை ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 4,250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மெட்ரோ பாதையின் துவக்க விழா பெங்களூரு பயணிகளுக்கு தூய்மையான, பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயண வசதியை வழங்குவதுடன், நகரின் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.

***

AD/PKV/DL



(Release ID: 1910728) Visitor Counter : 105