பிரதமர் அலுவலகம்
மேகாலயா மாநிலத்தில் முதல் மின்சார ரயில் சேவை துவக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
Posted On:
17 MAR 2023 8:19PM by PIB Chennai
அபயாபுரி-பஞ்சரத்னா, துத்னை-மெண்டிபாதர் ஆகிய மேகாலயாவின் முக்கிய பகுதிகளில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளை இந்திய ரயில்வே முழுமையாக நிறைவேற்றியுள்ளதை அடுத்து, அம்மாநிலத்தில் முதன் முறையாக மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேகாலயா பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“மேகாலயாவிற்கும், வடகிழக்குப் பகுதிகளில் இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான அற்புதமான செய்தி.”
-----
AD/RB/KPG
(Release ID: 1908308)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam