பிரதமர் அலுவலகம்

மார்ச் 21, 2023 அன்று வடகிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவிற்கும் பாரத் கௌரவ் ரயில் சேவை குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 06 MAR 2023 8:09PM by PIB Chennai

வரும் மார்ச் 21, 2023 அன்று வடகிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவிற்கும் பாரத் கௌரவ் ரயில்  சேவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது, மகிழ்ச்சியான மற்றும் நினைவை விட்டு நீங்காத பயணமாக அமையும் என்றும், வடகிழக்கு பகுதிகளை அறிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பு என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாரத் கௌரவ் டீலக்ஸ் குளிர்சாதன பயணிகள் ரயில் மூலம் “வடகிழக்கு பகுதிகளை கண்டறிதல்: குவஹாத்திக்கும் அப்பால்” என்ற சிறப்பு சேவையை வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மார்ச் 21 அன்று தில்லி சாஃப்தார்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், அசாமின் குவஹாத்தி, சிவசாகர், ஜார்ஹட் மற்றும் காசிரங்கா, திரிபுராவின் உனகோடி, அகர்தலா மற்றும் உதய்பூர், நாகாலாந்தின் திம்மாப்பூர் மற்றும் கொஹிமா, மேகாலயாவின் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளுக்கு 15 நாட்களில் செல்லும்.

இந்த சிறப்பு ரயில் சேவை பற்றி மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள தொடர் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

“இது, மகிழ்ச்சியான மற்றும் நினைவை விட்டு நீங்காத பயணமாகவும், வடகிழக்கு பகுதிகளை அறிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பாகவும் அமையும்.”

***

 (Release ID: 1904674)

AP/RB/RR



(Release ID: 1904806) Visitor Counter : 136