பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பயனில்லா 30 தரிசு நிலங்கள் அழகிய பசுமை சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 22 FEB 2023 12:46PM by PIB Chennai

1610 ஹெக்டர் பரப்பளவில் உள்ள பயனில்லா 30 தரிசு நிலங்களை அழகிய பசுமை சுற்றுலா தலங்களாக மாற்றியமைத்துள்ள கோல் இந்தியா நிறுவனக் குழுவினரின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் திரு.ராவ் சாஹேப் படேல் தன்வே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நீடித்த வளர்ச்சி மற்றும் பசுமை சுற்றுலாவை மேலும் மேம்படுத்துவதற்கான பாராட்டுக்குரிய முயற்சி”

***

Release ID: 1901261

SRI/PLM/SG/KRS


(Release ID: 1901308)