பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் வாழ்த்து
                    
                    
                        பிப்ரவரி 26, 2023 அன்று ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள்
                    
                
                
                    Posted On:
                13 FEB 2023 9:00AM by PIB Chennai
                
                
                
                
                
                
                உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி 26, 2023 அன்று ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர் ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியதாவது:
“உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள். புதுமையான நிகழ்ச்சிகளின் வாயிலாகவும், மனித படைப்பாற்றலை வெளிப்படுத்தியும் ஏராளமானோரின் வாழ்வை வானொலி தொடர்ந்து ஒளிமயமாக்கட்டும்.”
“உலக வானொலி தினத்தையொட்டி 26-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியின் 98-வது பதிப்பு பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மை கவ், நமோ செயலியில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் அல்லது 1800-11-7800 எண்ணைத் தொடர்பு கொண்டு உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.”
***
(Release ID: 1898607) 
PKV/RB/RR
                
                
                
                
                
                (Release ID: 1898653)
                Visitor Counter : 343
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam