பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை நி-க்ஷய் மித்ரா-வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளின் பராமரிப்பிற்கு தமது சேமிப்பில் இருந்து பங்களிப்பு வழங்கியதற்கும் பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 04 FEB 2023 10:47AM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை நி-க்ஷய் மித்ரா-வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளை தமது சேமிப்பைக் கொண்டு பராமரித்த குறிப்பிடத்தக்க பணிக்காகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"குறிப்பிடத்தக்க இந்த செயல், காசநோய் இல்லாத இந்தியாவை அடைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும்."

                                                     ------------ 


(रिलीज़ आईडी: 1896257) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Kannada , Telugu , Bengali , Assamese , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati