நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை

முக்கிய அம்சங்கள்

Posted On: 01 FEB 2023 1:35PM by PIB Chennai
  1. மத்திய பட்ஜெட்டில் சப்தரிஷி முன்னுரிமைகள்:

 

  1. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
  2. கடைசி நபரையும் சென்றடைந்தது
  3. முதலீடு மற்றும் கட்டமைப்பு
  4. ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல்
  5. பசுமை வளர்ச்சி
  6. இளைஞர் சக்தி
  7. நிதித்துறை

 

  1. தனிநபர் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

  1. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 27 கோடியாக உயர்ந்துள்ளது.

 

  1. உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.

 

  1. நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

  1. வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

 

  1. உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடற்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

  1. உலகத்தரத்துடன் கூடிய தனித்துவம் வாய்ந்த டிஜிட்டல் புது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்.

 

  1. கொரோனா தொற்றின் போது ஒருவர் கூட பசியுடன் உறங்கச்செல்லக் கூடாது என்ற நிலை உறுதிசெய்யப்பட்டது.

 

10. 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி 102 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

 

11. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அடுத்த ஓராண்டிற்கு பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமை.

12. உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

13. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

14. 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 

15. பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

 

16. கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு.

 

17. 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

 

  1.  2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

  1. சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

20. உயர் மதிப்பிலான தோட்டப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் விதை நேர்த்தி செய்தல், தரமான நடவுக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.2,200 கோடி நிதிஒதுக்கீடு

 

21. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முன்னுரிமை துறையில் நிலவும் கடன் பற்றாக்குறையை களைய தேசிய வீட்டுவசதி வங்கி மூலமாக நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்படும்.

 

22. ஆன்லைன் மூலம் ஆவணங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் டிஜி லாக்கர் முறை வலுப்படுத்தப்படும்.

 

23.  புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் 5-ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலி உருவாக்கங்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 100 ஆய்வகங்களை ஏற்படுத்த முடிவு.

 

24. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒருகோடி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முடிவு. இதற்காக 10,000 உயிரி உள்ளீட்டு ஆதார மையங்கள் அமைக்கப்படும்.

 

25. 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களின் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்படும்.

 

26. நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் பல்வேறு படிவங்களை கையாண்டு விரைவாக மதிப்பீடு செய்ய மத்திய செயலாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும்.

 

27.  ஊரகப்பகுதிகளில் இளம் தொழில்முனைவோர் விவசாயம் தொடர்பான புத்தொழில்களை நிறுவ ஊக்கம் அளிக்கும் வகையில் வேளாண் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நிதியம் உருவாக்கப்படும்.

 

28. இந்தியாவை சிறுதானியங்களின் உலகளாவிய மையமாக உருவாக்க ஹைதராபாதில் உள்ள இந்திய சிறுதானிய ஆய்வு மையத்திற்கு ஆதரவு அளிக்கப்படும்.

 

29. கால்நடை பராமரிப்பு, பால்வளம்