பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஹனுக்கா பண்டிகையையொட்டி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 18 DEC 2022 9:23PM by PIB Chennai

இஸ்ரேல் நாட்டில் கொண்டாடப்படும் ஹனுக்கா – ஒளிப் பண்டிகையையொட்டி அந்நாட்டு மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உலகம் முழுவதும் இதனைக் கொண்டாடுபவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

எனது நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேலில் வாழும் நண்பர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள இந்த ஒளிப் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கும் ஹனுக்கா வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

******


(Release ID: 1884641)

AP/GS/RS/RR(Release ID: 1884699) Visitor Counter : 85