பிரதமர் அலுவலகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் பாராட்டினார்
प्रविष्टि तिथि:
03 DEC 2022 9:28AM by PIB Chennai
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் துணிச்சலையும் சாதனைகளையும் நான் பாராட்டுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் பிரகாசிக்க ஏதுவாக எங்கள் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது."
"எங்கள் அரசு அணுகல்தன்மையில் சமமாக கவனம் செலுத்துகிறது, இது முதன்மையான திட்டங்கள் மற்றும் அடுத்த ஜென் இன்ஃப்ரா உருவாக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர அடித்தளநிலையில் பணிபுரியும் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்."
******
AP/SMB/DL
(रिलीज़ आईडी: 1880628)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam