பிரதமர் அலுவலகம்
உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது: பிரதமர்
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ஃபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பதற்கு பாராட்டு
Posted On:
29 NOV 2022 6:08PM by PIB Chennai
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 7 மாதங்களுக்குள் மொபைல் ஃபோன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்த 2.2 பில்லியன் டாலரை அளவை விட இருமடங்குக்கும் அதிகம்.
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது”.
**************
AP/PKV/PK/KRS
(Release ID: 1879819)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam