பிரதமர் அலுவலகம்

இந்தோனேசியாவின் பாலியில் நடந்த இந்திய சமூக மக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 15 NOV 2022 4:40PM by PIB Chennai

நமஸ்தே! வணக்கம்!

அனைவருக்கும் வணக்கம்! இந்தோனேசியாவின் பாலிக்கு வரும்போது ஒவ்வொரு இந்தியனுக்கும் முற்றிலும் வித்தியாசமான உணர்வு கிடைக்கிறது. நானும் அதே அதிர்வுகளை அனுபவிக்கிறேன். பல்லாயிரம் வருடங்களாக இந்தியாவுடன் தொடர்பு வைத்திருக்கும் மக்களும், இடமும், பல தலைமுறைகள் வந்து, சென்று பல்லாயிரம் ஆண்டுகளாகியும், அதே பாரம்பரியம் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்கிறது என்று கேள்விப்படும் போது  வித்தியாசமான உணர்வைத் தருகிறது. மகிழ்ச்சி.

 

பாலியில் இருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு அதன் பாரம்பரியத்தைக் கொண்டாடும் போது நான் உங்களுடன் பேசுவது போல், இந்தியாவின் கட்டாக்கில் உள்ள மகாநதி ஆற்றின் கரையில் பாலி ஜாத்ரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இது என்ன பலி ஜாத்ரா? இந்தியாவிற்கும்,  இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஆயிரக்கணக்கான வருட வர்த்தக உறவுகளை இந்த விழா கொண்டாடுகிறது. இந்தோனேஷியாவின் மக்கள் இந்த ஆண்டு பாலி ஜாத்ராவின் புகைப்படங்களை இணையத்தில் பார்க்கும்போது, அவர்கள் உண்மையிலேயே பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். கொரோனா காரணமாக ஜாத்ரா பிரச்சனைகளை எதிர்கொண்டது, ஆனால் இப்போது பாலி ஜாத்ரா பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆடம்பரத்துடனும், தெய்வீகத்துடனும், லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடனும் மிகப் பெரிய அளவில் ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் பாலி ஜாத்ராவை நினைவுகூரும் போட்டியை நடத்துகிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காகிதப் படகுகளை மிதக்க வைத்து உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளனர். ஒடிசாவில் இன்று கூடியிருக்கும் மக்கள் உடல் ரீதியாக அங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனம் பாலியில் இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.

 

நண்பர்களே,

 

நமது உரையாடலின் போது, 'இது ஒரு சிறிய உலகம்' என்று அடிக்கடி கூறுவோம். ஆனால் இந்தியாவிற்கும்,  இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவுகளைப் பார்த்தால், இது சரியாகப் பொருந்துகிறது. கடலின் மிகப்பெரிய அலைகள் இந்தியாவிற்கும்,  இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவை உற்சாகத்துடன் சோர்வடையாமல் வைத்திருக்கிறது. எங்கள் உறவுகளும் அந்த அலைகளைப் போல மிதந்து கொண்டே இருக்கின்றன. கலிங்கம், மேடாங் போன்ற சாம்ராஜ்ஜியங்கள் மூலம் இந்தியாவின் தத்துவம் மற்றும் கலாச்சாரம் இந்தோனேசிய மண்ணை அடைந்த ஒரு காலம் இருந்தது. மேலும் இன்று இந்தியாவும்,  இந்தோனேசியாவும் 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்காக தோளோடு, தோள் சேர்ந்து உழைக்கின்றன

 

இந்தியாவிலிருந்து வந்த மக்களை இந்தோனேசியா அன்புடன் ஏற்றுக்கொண்டு அவர்களைத் தன் சமூகத்தில் இணைத்துக் கொண்டது. இதனால்தான் இன்று நீங்கள் அனைவரும் இந்தோனேசியாவின் வளர்ச்சிக்கும்,  செழுமைக்கும் பங்களிக்கிறீர்கள். எங்கள் சிந்திக் குடும்பங்கள் பல இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் இருந்து வந்த நமது சிந்தி குடும்ப சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஜவுளி மற்றும் விளையாட்டு பொருட்கள் துறைகளில் மட்டுமல்லாமல், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையிலும் நிறைய பங்களித்துள்ளனர். குஜராத்தில் இருந்து ரத்தினங்கள், வைரங்கள், சுரங்கங்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலர் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழில் துறை வல்லுநர்கள், இந்தோனேசியாவின் வளர்ச்சியின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். இங்குள்ள கலாச்சாரம் மற்றும் கலைகளை மேலும் செழுமைப்படுத்த பல தமிழ் பேசும் கலைஞர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். சுமார் 3-4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவைச் சேர்ந்த நியோமன் நூர்தாவுக்கு இந்தியா பத்மஸ்ரீ விருது வழங்கியபோது, இந்தியாவின் ராஷ்டிரபதி பவன் இடியுடன் கூடிய கரவொலியால் எதிரொலித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய கலைப் படைப்பான ‘கருட விஷ்ணு காஞ்சனா’வைப் போற்றாத இந்தியர்கள் இருக்க மாட்டார்கள். அதேபோல, இந்தோனேசியாவைச் சேர்ந்த வயன் டிபியா மற்றும் அகஸ் இந்திரா உதயனா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அவர்களைப் பற்றி நிறைய அறிந்தேன்.

இன்றும் இங்கு இருக்கும் அகஸ் இந்திரன் உதயணனைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். பாலியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல கடுமையாக உழைத்து வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு, ஒவ்வொரு இந்தியனின் நரம்புகளிலும் உள்ள ‘அதிதி தேவோ பவ’ என்று கூறினார். நேர்காணலைப் படித்தேன். கடந்த முறை ஜகார்த்தா வந்தபோது இந்தோனேசியா மக்களின் பாசத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்தேன். என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும், பாசமும், நேசமும்  இருந்தது. ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் நான் பட்டம் பறக்க விடும் வேடிக்கை நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது. இருவரும் பட்டம் பறக்க விடச் சென்றோம். அற்புதமாக இருந்தது. குஜராத்தில் சங்கராந்தியன்று பட்டம் பறக்கும் அனுபவம் எனக்கு அதிகம், இந்தோனேசியாவிலும் மக்கள் சங்கராந்தியன்று நிறைய காத்தாடிகளை பறக்க விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

 

இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் சங்கமம் மகிழ்ச்சியான காலங்களில் மட்டுமே என்று இல்லை. இன்பம், துன்பம் இரண்டிலும் நாம் துணையாக இருக்கிறோம். 2018 இல் இந்தோனேசியாவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா உடனடியாக ஆபரேஷன் சமுத்திர மைத்ரியைத் தொடங்கியது. அந்த வருடம் நான் ஜகார்த்தா வந்தபோது ஒன்று சொன்னேன். இந்தியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே 90 கடல் மைல் தூரம் இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் 90 கடல் மைல் தூரத்தில் இல்லை, 90 கடல் மைல் அருகில் இருக்கிறோம்.

 

*********

MSV/GS/DL



(Release ID: 1877536) Visitor Counter : 175