பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ் சங்கமம் குறித்த மக்களின் கருத்துக்களுக்குப் பிரதமர் பதிலளித்துள்ளார்


காசி தமிழ் சங்கமம் மிகவும் புதுமையான நிகழ்வு; கலாச்சாரப் பரிமாற்றங்களை அதிகரிக்கும், இந்தியாவின் கலாச்சாரப் பன்மைத்துவத்தைக் கொண்டாடும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2022 9:56AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று தொடங்கிவைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் குறித்த மக்களின் கருத்துக்களுக்கு அவர் பதிலளித்துள்ளார். நாட்டின் மிகமுக்கியமான, கற்றலின் தொன்மை இடங்களான தமிழ்நாடு மற்றும் காசி இடையே பன்னெடுங்கால தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து மறு உறுதி செய்வதற்கான இந்த முன்முயற்சிக்கு மக்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் காசியின் மகத்தான பாரம்பரியம் குறித்த மக்களின் கருத்துக்களை அங்கீகரித்துப் பிரதமர் பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஏராளமான மகான்களால் வளர்க்கப்பட்ட இது சிறந்த பிணைப்பாகும்”

 “தமிழ் மொழி அழகானது; தமிழ் கலாச்சாரம் உலக அளவில் பிரபலமானது”

 

*********

MSV/SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1877496) வருகையாளர் எண்ணிக்கை : 205