பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணா-வின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2022 1:53PM by PIB Chennai
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணா-வின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா-வின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா-வின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும் என்று திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"கிருஷ்ணா ஒரு பழம்பெரும் நடிகராக திகழ்ந்தார். அவர் தனது பன்முக நடிப்பு மற்றும் கலகலப்பான ஆளுமை மூலம் மக்களின் இதயங்களை வென்றார். அவரது மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு (@urstrulyMahesh) மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன. ஓம் சாந்தி."
**************
MSV/PLM/RS/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1876094)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam