பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
प्रविष्टि तिथि:
19 OCT 2022 10:30PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
தீபாவளியும் தந்தேராசும் விரைவாகவே வந்திருப்பதால், ஜூனாகத் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும், தங்களின் ஆசிகளை வழங்கியிருக்கும் மக்களுக்கும் நன்றி.
சகோதர, சகோதரிகளே,
மத்திய அரசில் பொறுப்புகளை ஏற்பதற்காக குஜராத்தில் இருந்து சென்றுவிட்டபோதும், அதே மாண்புகள் மற்றும் பாரம்பரியங்களுடன் குஜராத்தின் நலனுக்கு முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் அவரது குழுவினரும் பணியாற்றுவதால், குஜராத் தற்போது அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
குஜராத்தில் மிகப்பெரிய கடற்கரை உள்ளது. ஆனால், கடந்த கால அரசுகள் கடல்களை சுமை போல கருதியதுடன், அதன் தூய்மையான காற்றை விஷமாக்கியுள்ளனர். அந்தக் காலம் மாறிவிட்டது. அதே கடல்கள் இப்போது நமது முயற்சிகளால் பயன்களை அறுவடை செய்கின்றன.
நண்பர்களே, இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிப் பணிகளில் இரட்டை வேகத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய தினமே 3 மீன்பிடித் துறைமுகங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளும் கால்நடை பராமரிப்புப் பணியாளர்களும் மீனவர் சமுதாயத்தினரும் விவசாயக் கடன் அட்டைகளை பெற்றுள்ளனர். இதனால், வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.5 கோடி பேர் பயனடைகிறார்கள்.
துறைமுகங்களுக்கான முன்முயற்சியை மட்டும் அரசு மேற்கொள்ளவில்லை, துறைமுகத்தை மையப்படுத்திய வளர்ச்சியையும் செயல்படுத்துகிறது. ஜூனாகத் தவிர புதிய கடலோர நெடுஞ்சாலை, போர்பந்தர், ஜாம் நகர், தேவ்பூமி துவாரகா, மார்பி ஆகிய மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் தெற்கு குஜராத் வழியாக செல்கிறது. இது குஜராத்தின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதியின் போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தும்.
அடிப்படை கட்டமைப்பின் வளர்ச்சி பெருமளவில் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. தற்போது மிகப்பெரிய இழுவை போக்குவரத்து உள்ளவற்றில் ஒன்றாக இந்தப் பகுதியும் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கெசோட் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் பறக்கத் தொடங்கின. இந்த விமான நிலையம் மேலும் மேம்படுத்தப்பட்டு சரக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டால், இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கும்.
விண்வெளி, அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் தேசம் சாதனைகளை புரிந்து வருகிறது. இருப்பினும், குஜராத் மற்றும் அதன் மக்களின் சாதனைகள் சிலரால் அரசியலாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக குஜராத்தை குறைகூறுகின்றன என்றாலும், சர்தார் படேலின் ஒரே இந்தியா- உன்னத இந்தியா உணர்வையும், கனவுகளையும் நீர்த்துப் போக நாம் அனுமதிக்கக்கூடாது. குஜராத்தின் ஒற்றுமையே அதன் பலம்.
**************
(रिलीज़ आईडी: 1870215)
आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam