பிரதமர் அலுவலகம்
மும்பையிலுள்ள ஜூஹூ கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை பிரதமர் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2022 8:03PM by PIB Chennai
மும்பை ஜூஹூ கடற்கரையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சி குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் ட்விட் செய்துள்ளதை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதனை பாராட்டியுள்ளார். சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் ஈடுபட்ட மக்களை பாராட்டியுள்ள திரு. மோடி, நமது கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“பாராட்டத்தக்கது.. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
இந்தியா நீண்ட மற்றும் அழகான கடற்கரைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்”
------------
(Release ID: 1858795)
(வெளியீட்டு அடையாள எண்: 1858885)
வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam