பிரதமர் அலுவலகம்

அகமதாபாத்தில் ‘கலம் நோ கார்னிவல்’ புத்தக கண்காட்சியின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 08 SEP 2022 7:18PM by PIB Chennai

நவபாரத் சாகித்ய மந்திரால் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய புத்தக கண்காட்சி, காலப்போக்கில் மேலும் வளம் பெற்றுள்ளது. ‘கலம் நோ கார்னிவல்என்பது குஜராத்தி மொழி தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவந்த புத்தகங்கள் அடங்கிய பிரம்மாண்டமான சேகரிப்பாகும்.

நண்பர்களே,

இந்த ஆண்டு விடுதலையின் அமிர்த பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் வேளையில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. நம் சுதந்திர போராட்டத்தின் வரலாறை புதுப்பிப்பது அமிர்த பெருவிழாவின் ஒரு பரிமாணமாகும். மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின் அத்தியாயங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதில் நாம் உறுதிபூண்டிருக்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கலாம். புத்தகக் கண்காட்சியில் சுதந்திரப் போராட்டம் சம்பந்தமான புத்தகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கலாம்.

மாறிவரும் காலகட்டத்தில் நமது புத்தக வாசிப்பு பழக்கம் முறைபடுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியம். புத்தகம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. இளைஞர்களிடையே புத்தகம் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கு தேவையான முயற்சிகளையும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்ளவும் இது போன்ற நிகழ்வுகள் மிக முக்கிய பங்காற்றும் என்று நான் நம்புகிறேன்.

புத்தக கண்காட்சிகளின் மதிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கண்காட்சிகளுக்கு குடும்பத்தோடு நாம் செல்ல வேண்டும். குஜராத் மக்கள் அனைவரும், வாசிப்பை அதிகரித்து, சிந்தனை வளத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

----



(Release ID: 1858492) Visitor Counter : 111