பிரதமர் அலுவலகம்
உலக யானை தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
12 AUG 2022 11:03AM by PIB Chennai
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து, பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘உலக யானை தினத்தில், யானைகளை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறேன். ஆசிய யானைகளில் 60 சதவீதத்தை இந்தியா கொண்டுவந்துள்ளது குறித்து, நீங்கள் மகிழ்ச்சியடையலாம். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் பாதுகாப்பில், ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”
“யானைகள் பாதுகாப்பில் வெற்றியை, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் பெரும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், பொருத்திப்பார்க்கவேண்டும். சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை வலுப்படுத்துவதில், உள்ளூர் சமுதாயத்தினரையும், அவர்களது பாரம்பரிய ஞானத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
*****
(Release ID: 1851126)
(रिलीज़ आईडी: 1851145)
आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam