பிரதமர் அலுவலகம்

சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ‘பி’ (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் பிரதமர் வாழ்த்து

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் பாராட்டு

Posted On: 10 AUG 2022 8:12PM by PIB Chennai

சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதற்காகவும், உலக நாடுகளை வரவேற்று, நமது தலைசிறந்த கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை முன்னிலைப்படுத்தியதற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“அண்மையில் சென்னையில் நிறைவடைந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழுவினர் எழுச்சிமிகு செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி (ஆடவர்) அணிக்கும், இந்திய ஏ (மகளிர்) அணிக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவில் செஸ் போட்டியின் சிறந்த எதிர்காலத்திற்கு இது ஓர் முன்னோட்டமாக அமைந்துள்ளது.”

“பதக்கங்களை வென்ற நமது வீரர்கள் குகேஷ். டி. நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வாழ்த்துகள். அபாரமான உறுதி மற்றும் துணிச்சலை வெளிப்படுத்திய தலைசிறந்த வீரர்கள், இவர்கள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டு மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.  உலக நாடுகளில் இருந்து வந்திருந்த போட்டியாளர்களை வரவேற்று, நமது தனிச்சிறப்புமிக்க கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் பண்பை முன்னிலைப்படுத்தியதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

*****

(Release ID: 1850636)



(Release ID: 1850821) Visitor Counter : 187