பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெண்கலப் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 08 AUG 2022 7:49PM by PIB Chennai

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்தியன் ஞானசேகரனின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"காமன்வெல்த் போட்டி முழுவதும் அற்புதமான செயல்திறனைக் காட்டினார் @sathiyantt. டேபிள் டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவரை வாழ்த்துகிறேன். அவரது விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர் பாராட்டப்படுகிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறந்து விளங்குவார் என்று நான் நம்புகிறேன். #Cheer4India"

********
 


(Release ID: 1850192) Visitor Counter : 147