பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமை

प्रविष्टि तिथि: 08 AUG 2022 8:10AM by PIB Chennai

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;  “பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் வெண்கலப்பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது.  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க செல்வதற்கு முன்பாக  என்னை சந்தித்த ட்ரீசா, காயத்ரி உடனான நட்பு குறித்து  கூறினார். ஆனால் அவர் பதக்கம் வென்றால் எவ்வாறு அதை கொண்டாடுவார் என்பது குறித்து அவர்  உறுதியாக தெரிவிக்கவில்லை. தற்போது கொண்டாட்டம் குறித்து  அவர் திட்டமிட்டிருப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1849597)


(रिलीज़ आईडी: 1849660) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam