பிரதமர் அலுவலகம்
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணையின் உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
08 AUG 2022 8:30AM by PIB Chennai
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெற்றது அவர்களுடைய மகிழ்ச்சியான தருணம். ஷரத் கமல்- ஸ்ரீஜா அகுலா இணை குழுவாக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அவருடைய உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் அனைத்து பிரிவுகளிலும் ஷரத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிறப்பானது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1849602)
(रिलीज़ आईडी: 1849645)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam