பிரதமர் அலுவலகம்
குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2022 10:03PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்தருப்பதாவது:
“இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு வாழ்த்துகள். தலைசிறந்த குடியரசு துணைத் தலைவராக அவர் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அவரது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்திலிருந்து நமது நாடு பெருமளவு பயனடையும். @jdhankhar1”
திரு ஜெகதீப் தன்கருக்கு வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலையின் அமிர்த பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் வேளையில் விவசாயத் திருமகனை குடியரசு துணைத் தலைவராகப் பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது. அபாரமான சட்ட அறிவு மற்றும் அறிவுசார் திறனை அவர் பெற்றுள்ளார். @jdhankhar1”
(Release ID: 1849206)
(வெளியீட்டு அடையாள எண்: 1849332)
வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam