பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனல் பட்டேலுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 AUG 2022 8:38AM by PIB Chennai

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனல் பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:

திறமையும், நிதானமும், உறுதியும் இணையும் போது, அனைத்தும் சாத்தியமே. பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் சோனல் பட்டேல் இதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வரும் காலங்களிலும் தனித்திறமையோடு அவர் தொடர்ந்து விளங்க பிரார்த்திக்கிறேன். #Cheer4India

•••••••••••••


(Release ID: 1849307) Visitor Counter : 183